வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:399)


                                                                                                                                                                                                               

பொழில் வாழ்த்துப் பாடல்

பொழில் பண்பலை

இலக்கியப் பொழில் - நுழைவாயில்

வாழ்வியல் இலக்கியப் பொழில் நுழைவாயில் வந்தோரை வணங்கி மகிழ்கிறோம்.
அன்புடன் வரவேற்கிறோம்.

          உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டுமே செம்மொழிகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் தமிழ் மொழி தலையாயது, காரணம் உலகில் வாழும் யாவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்த அறவழிகளையும் நெறிமுறைகளையும் எண்ணற்ற புலவர் பெருமக்கள் அருளிச் சென்றுள்ளனர்.

          இந்த நவீன உலகத்தில் அதிவேக வாழ்க்கை முறையில் எதிர்கால வாழ்வை எண்ணியவாறு பயணிக்கிறோம். ஆகவே அருந்தமிழ் அருளியுள்ள நல்ல பல நெறிமுறைகளை கற்றறிய மறந்துவிடுகிறோம்.

          சிங்கப்பூரில் தமிழ்மொழியானது, ஆட்சிமொழிகளுள் ஒன்று. சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி தமிழ்மொழி வளரவும் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருவது போற்றுதற்குரியது.

          கடந்த 11-11-2017 அன்று தொடக்க விழா கண்ட “வாழ்வியல் இலக்கியப் பொழில்” பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்குமான இணைப்புப் பாலமாக இருந்து, அவர்களுடைய முக்கிய தேவைகளுள் ஒன்றான வாழ்வியல் நெறிமுறைகளை அலசி ஆராய்ந்து சிறுவயது முதல் தக்க நூல்கள் கூறும் நல்ல பல கருத்துகளைத் திரட்டி, யாவரும் எளிதில் பின்பற்றும் வகையில் கொடுத்து தமிழ் இலக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் மாதாந்திர நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் நடத்தி வருகிறது.

           74 மாதங்கள் கடந்து, தமிழ்க் குடும்பங்கள் பல இணைந்து நடத்தும் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" என்ற பெயரில் சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் அமைப்பு மாதாந்திர நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளுள் ஒன்று. குறிப்பாக சங்க இலக்கிய நூல்களை கையில் எடுக்கவே பயந்திருப்போரிடையே புதிய புத்தாக்கச் சிந்தனைகளோடு வீறுநடை போட்டு இயங்கிவரும் இலக்கிய அமைப்பு.

          சங்க இலக்கியம் நூல்களைப் படித்து, சவால்களை முறியடித்து வாழ்வோம்; வெல்வோம்.

இன்ப தமிழைப் பருக !
இலக்கியப் பொழிலுக்குள் வருக !
பொழிலின் ஊடகங்கள்


தமிழ்ச் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சந்திப்பு - ஜனவரி 2024
அடுத்த நிகழ்வு (75ஆவது சந்திப்பு):
நாள்: 13-01-2024
நேரம்: பகல் 5.00 மணிக்கு
இடம்: பொங்கோல் சமூக மன்றம்


நமது ‘75ஆவது இலக்கியச் சந்திப்பு’ 13-01-2024 அன்று நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தம் பெயரைப் பதிவிட வேண்டிய அழைப்பு

Register Here !!

1 / 10
2 / 10
3/ 10
4 / 10
5/ 10
6/ 10
7/ 10
8 / 10
9/ 10
10/ 10

மூதுரை

வெண்பா :6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.